FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தவெக அரசின் முதல் பட்ஜெட்! வாக்களித்த ஜென்ஸீக்களின் எகிறும் எதிர்பார்ப்பு

தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் தவெகவுக்கு வாக்களித்த ஜென்ஸீக்களின் எகிறும் எதிர்பார்ப்பு

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 9:27 am IST
தமிழக சட்டப்பேரவை - IANS
பகிர்:

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசு ஆட்சியமைந்து, முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், தவெகவுக்கு வாக்களித்த ஜென்ஸீக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதாவது, தமிழக பேரவைத் தேர்தலின்போது, ஒவ்வொரு கட்சிகளும் அதன் வாக்குறுதிகளை வெளியிட்டன. தவெக. தனித்தனியாக பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டன. அதில், இளைஞர்களுக்கான சிறப்புத் தேர்தல் வாக்குறுதிகளும் அடங்கும்.

அவற்றில், இளைஞர்களைக் கவரும் பல வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.

Advertisement

Advertisement

அவற்றை நிறைவேற்றும் வகையில் புதிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறுமா என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கல்வி உத்தரவாதத் திட்டம் - 12 ஆம் வகுப்பிலிருந்து பிஎச்டி வரையில் கல்வி பயில ரூ. 20 லட்சம் வரையில் பிணையில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலைவாய்ப்பு தாமத சூழல் நிதியுதவி - 29 ஆவது வயதுக்குப் பிறகும் வேலைவாய்ப்பு கிடைப்பதில் தாமதமாகும் சூழல் ஏற்படுமானால், பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ. 4,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ. 2,500 இளைஞர் நல நிதியாக வழங்கப்படும்.

வெற்றி தொழில் முனைவோர் திட்டம் - தொழில் முனைவோரை உருவாக்க 25 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும்.

நமது ஊரில் நமக்கே வேலைவாய்ப்பு திட்டம்- தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதை உறுதி செய்வதே நமது அரசின் நோக்கமாகும். அதன்படி தனது பணியாளர்களில் 75 சதவிகிதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இருந்தால், அந்த தனியார் நிறுவனங்களுக்கு மாநில ஜிஎஸ்டி 2.5 சதவிகிதம் மானியம், 5 சதவிகிதம் மின் கட்டணம் மானியம் கொடுக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.

இதனுடன்,

  • அனைத்து மாநில அரசுப் பணியிடங்களுக்கும் ஆட்சேர்ப்பு நடத்த நிலையான கால அட்டவணை - அரசுப் பணிகளில் 365 நாள்களில் பணியமர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

  • மாநில முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு மன்றங்கள் நிறுவப்படும் போன்றவையும் அடங்கும்.

  • இவற்றில், ஒரு சில வாக்குறுதிகளையாவது நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் அறிவிப்பு வெளியாகும் என்பதே ஜென்ஸீக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

summary

TVK govt first budget Sky-high expectations Gen Z voters

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments