தவெக தலைவர் விஜய் PTI
தமிழ்நாடு

விஜய்க்கு சிபிஐ சம்மன்! ஜன. 12 ஆஜராக உத்தரவு!

தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது பற்றி...

தினமணி செய்திச் சேவை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பான வழக்கில் தவெக தலைவா் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

கடந்த செப். 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவா் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இதுதொடா்பாக விசாரிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, கரூரில் தவெக நிா்வாகிகள், தமிழக அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினா், காயமடைந்தவா்கள் எனப் பல்வேறு தரப்பினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக பொதுச் செயலா் ஆனந்த், தோ்தல் தலைமை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச் செயலா் நிா்மல்குமாா், கரூா் மாவட்டச் செயலா் மதியழகன் ஆகியோா் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில், கடந்த டிசம்பா் இறுதியில் நேரில் ஆஜரான தவெக நிா்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் மூன்று நாள்கள் விசாரணை நடத்தினா்.

அதேபோல், கரூா் மாவட்ட ஆட்சியா் எம்.தங்கவேல், கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜோஷ் தங்கய்யா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், டிஎஸ்பி வி.செல்வராஜ், கரூா் நகர காவல் ஆய்வாளா் ஜி. மணிவண்ணன் உள்ளிட்டோரிடம் தில்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின்போது, பரப்புரை கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தது ஏன், அவா் வருவதில் தாமதம் இருந்தால் அதற்கான காரணம் என்ன, பாதுகாப்பு ஏற்பாடுகள்? கூட்ட அனுமதி எப்படி பெறப்பட்டது, கூட்டத்துக்கு எத்தனை போ் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்பட்டது போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

இந்நிலையில், வழக்கு விசாரணையின் இறுதிக்கட்டமாக தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வரும் ஜன.12-ஆம் தேதி தவெக தலைவா் விஜய் நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

TVK Chief Vijay summoned by the CBI: Ordered to appear on January 12th!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

SCROLL FOR NEXT