நயினார் நாகேந்திரன்  
தமிழ்நாடு

டாஸ்மாக் வருமானத்தைப் பெரிதாகப் பார்க்கும் அரசு: திமுக மீது நயினார் நாகேந்திரன் விமர்சனம்

டாஸ்மாக் வருமானத்தைப் பெரிதாகப் பார்க்கும் அரசு என்று திமுகவை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

டாஸ்மாக் வருமானத்தைப் பெரிதாகப் பார்க்கும் அரசு என்று திமுகவை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது திமுக அரசு! “போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்” என உருகி உருகி காணொளி வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் சுமார் ரூ. 518 கோடிக்கும் அதிகமாக மது விற்பனை களைகட்டியிருப்பது சுவாரஸ்யமான நகை முரண். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சாராய வாடை இல்லாத கொண்டாட்டங்களே இல்லை என்று கூறுமளவிற்குப் பண்டிகை நேரங்களில் சாராய விற்பனையைப் பல மடங்குகளாக முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறது இந்த டாஸ்மாக் மாடல் அரசு.

அதிலும், குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு ரூ. 3000 கொடுக்கிறோம் என ஊரெல்லாம் தம்பட்டம் அடித்துவிட்டு, அந்தப் பணத்தை டாஸ்மாக் வாயிலாக வசூலித்துள்ள திமுக அரசின் அறிவாற்றலைப் பார்க்கையில், இதற்குப் பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே என்ற நகைச்சுவை வசனம் தான் நினைவிற்கு வருகிறது. பொங்கலுக்குக் கொடுத்த ரூபாய் நோட்டில் உள்ள எண்ணும், டாஸ்மாக்கில் வசூலாகியுள்ள நோட்டில் உள்ள எண்ணும் ஒத்துப்போகிறது என்று செய்திகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மக்களின் மகிழ்ச்சியை விட, மக்களின் மன நிம்மதியை விட, போதையால் சமூகத்தில் நிகழும் அசம்பாவிதங்களைத் தடுப்பதை விட டாஸ்மாக் வருமானத்தைப் பெரிதாகப் பார்க்கும் ஒரு அரசு, இனியொரு முறை தப்பித்தவறி கூட தமிழகத்தை ஆளக் கூடாது! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

"BJP State President Nainar Nagendran has criticized the DMK for focusing heavily on TASMAC revenue."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடுகத்தூரில் எருதுவிடும் விழா: நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது! தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அறிவுரை!

முகேஷ் அம்பானி வீட்டின் மின்சார செலவு ஒரு மாதத்துக்கு இத்தனை லட்சங்களா?

சின்னசாமி திடலில் ஐபிஎல், சர்வதேச போட்டிகளை நடத்த கர்நாடக அரசு அனுமதி!

11 பயணிகளுடன் இந்தோனேசியா விமானம் மாயம்! தேடுதல் நடவடிக்கை தீவிரம்!

SCROLL FOR NEXT