மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மறுசீரமைப்புக் குழு ஆலோசனை!
திமுக மறுசீரமைப்புக் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது குறித்து...
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மறுசீரமைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, தங்கம் தென்னரசு, எஸ்.எஸ். சிவசங்கர் உள்ளிட்ட திமுக மறுசீரமைப்புக் குழு நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் திமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள், அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
Advertisement
Advertisement
2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கட்சியை அடிமட்டம் முதல் சீரமைக்கும் நோக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 10 பேர் கொண்ட மறுசீரமைப்பு ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளார்.
இக்குழுவில், முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அர. சக்கரபாணி, எஸ்.எஸ். சிவசங்கர், எம்.பி.க்கள் எம்.எம். அப்துல்லா, ச. முரசொலி, முன்னாள் எம்எல்ஏக்கள் தமிழரசி ரவிக்குமார், இ. பரந்தாமன், எழிலன் மற்றும் எஸ்.கே.பி. கருணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவானது, கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மறுவரையறை, சார்பு அணிகளின் மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் பணிக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவாக ஆராயும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இக்குழுவின் பிரதிநிதிகளுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
DMK restructuring committee holds consultation under the leadership of M.K. Stalin!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.