முகப்பு
தமிழ்நாடு

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு! இன்றைய செய்திகள் ஜூலை 4 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.

Updated On : 4 ஜூலை 2026, 9:49 pm IST
குற்றாலம் பிரதான அருவி - படம்: ENS
பகிர்:

எல் நினோ பாதிப்பிலிருந்து மக்களையும் விவசாயிகளையும் காக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எல் நினோ பாதிப்பிலிருந்து தமிழக மக்களையும் விவசாயிகளையும் காக்க, தவெக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு!

புணேயில் சனிக்கிழமை பெய்த கனமழையால் பல சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி!

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமான மிகவும் இளம் வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.

சென்னை, 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு!

ஆளுநர் ஆர்லேகரை தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமனம் செய்யப்பட்ட வெங்கட நாராயணா இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்!

அண்மையில் அதிமுவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தவெகவில் இணைந்துள்ளார்.

ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவருக்கு அரசு வழக்கறிஞர் பதவி: டிடிவி தினகரன் விமர்சனம்!

வாணியம்பாடியில் ஆடு திருட்டு வழக்கில் தொடர்புடையவருக்கு அரசு வழக்கறிஞர் பதவி வழங்கப்பட்டிருப்பதாக அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

ஆதார் செயலி மூலம் மின்னஞ்சலை இணைக்கலாம்! 6 மாதங்களுக்கு மட்டும் இலவசம்!

ஆதார் செயலி மூலம், பயனர்கள், தங்களது மின்னஞ்சலை இணைக்கும் வசதி ஜூலை 1ஆம் தேதி முதல் இலவசமாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், இது ஆறு மாதங்களுக்கு மட்டுமே இலவசம். பிறகு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

நடிகை த்ரிஷா படித்து என்னவாக விரும்பினார்? பழைய நேர்காணலிலிருந்து...

தமிழ் சினிமாவில் லேசா லேசா வில் துடிப்பான இளைஞியாக அறிமுகமாகி இன்று வரை தமிழ் ரசிகர்களின் பிடித்த நடிகையாக த்ரிஷா வலம் வருகிறார்.

குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு லுக்-அவுட் நோட்டீஸ்?

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரா் அசோக்குமாருக்கு காவல்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருக்கிறது.

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!

தென்காசி மாவட்டம், குற்றாலம் மலைப் பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை நிர்வாகிகளுடன் இபிஎஸ் தீவிர ஆலோசனை!

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சட்டம் - ஒழுங்கு, குதிரை பேரம், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு... ஆளுநரிடம் பாஜக புகார்!

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை மற்றும் குதிரை பேரம், அமைச்சர் விஸ்வநாதன் விவகாரம் ஆகியவை குறித்து ஆளுநரிடம் பாஜக நிர்வாகிகள் புகார் கொடுத்துள்ளனர்.

கரூர் சம்பவம்! ஆதவ் அர்ஜுனா பேசியது ஏற்கத்தக்கதல்ல: இந்திய கம்யூ.

முதல்வர் விஜய் குறித்து முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் விமர்சனத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், கரூர் சம்பவம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.

ஃபீனிக்ஸ் பறவையென மீண்டெழுகிறோம்: மு.க. ஸ்டாலின்

திமுக மீண்டும் ஃபீனிக்ஸ் பறவைபோல் மீண்டு வருமென கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

18 பேர் பலி! ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற இன்று நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அமோனியா கசிந்த ஆலையில் இருந்து அமோனியா வாயுவை பாதுகாப்பாக வெளியேற்ற இன்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments