FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

உயர் சிறப்பு மருத்துவ இடங்களை பெற தவறிய தவெக அரசு! மு.க. ஸ்டாலின் கண்டனம்

151 உயர் சிறப்பு மருத்துவ இடங்களை பெற தவறிய தவெக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜூலை 2026, 11:41 am IST
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் - எக்ஸ்
பகிர்:

மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாட்டுக்கு என்று இருந்த 151 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களை பெற தவறிவிட்ட தவெக அரசுக்கு தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இது குறித்து தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் கண்டனம் வெளியிட்டிருந்த நிலையில், திமுக தலைவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க. போராடிப் பெற்றுத் தந்தது. ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.

Advertisement

Advertisement

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட த.வெ.க. அரசு; உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் என்று கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

மேலும்,

தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை?

மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்? மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட ஏன் தாமதம்?

நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்து வைக்காமல் 'சரண்டர்' ஆனதன் பின்னணி என்ன?

அகில இந்திய கவுன்சிலிங்கின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்னரே, மாநிலக் கலந்தாய்வை அவசரமாக நடத்தி 151 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவித்தது திட்டமிட்டே செய்யப்பட்டதா?

தமிழ்நாட்டுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்றப்படுவதை எதிர்த்து, கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் செய்யாதது ஏன்?

29-05-2026 உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு என்ன ஆனது?

இப்படி பல கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவர்கள் எழுப்புகிறார்கள்.

எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம். இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது.

த.வெ.க. அரசு இதில் உரிய விளக்கத்தை நம் அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளித்தாக வேண்டும்! என்று வலியுறுத்தியிருக்கிறார் மு.க. ஸ்டாலின்.

பல்வேறு தரப்பிலிருந்தும், இது குறித்து கண்டனங்கள் எழுந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments