இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.
ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம்
ஜப்பானின் டோக்கியோவில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் 11 பேர் காயமடைந்தனர்.
நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு
நீட் மறுதேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் மனநல ஆலோசனை பெற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மக்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடம்: நயினார் நாகேந்திரன்
தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதல்வர் விஜய் அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வெள்ளிக்கிழமை (ஜூன் 19) பேசியுள்ளார்.
Advertisement
Advertisement
தேசிய கீதம் குறித்து நான்தான் தீர்மானிப்பேன்!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தேசிய கீதம் நேற்று இரண்டு முறை பாடப்பட்டது தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது.
மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு
தில்லியில் நடைபெற்ற செய்யறிவு மாநாடு மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததாக ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி விமர்சித்துள்ளார்.
தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
எந்த நம்பகமான ஆதாரமும் இல்லாத தெளிவற்ற, தவறான குற்றச்சாட்டுகளைக் கொண்டதாகப் புகார் மனு இருப்பதாக தவெக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஒருமனதாக நிறைவேற்றம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேக்கேதாட்டு அணைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
திமுக ஆதரவு
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு அனைத்து வகையிலும் திமுக உறுதுணையாக இருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேமுதிக, பாமக ஆதரவு
மேக்கேதாட்டு அணைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
தீர்மானத்துக்கு ஆதரவு
மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு கொண்டுவந்த தீர்மானத்துக்கு மஜக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
மேக்கேதாட்டு அணை! காங்கிரஸ் கண்டனம்
மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு காங்கிரஸைச் சேர்ந்த தமிழ்நாட்டு அமைச்சர் ராஜேஷ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் விஜய், காவிரியின் குறுக்கே அணை கட்டும் முயற்சிக்கு எதிரான தனது முதல் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
குதிரை பேரம்: தவெக அரசுக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
தவெக அரசு மீதான குதிரை பேர அரசியல் தொடர்பான புகார் மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி வி. மோகனா அமர்வில் இன்று (ஜூன் 19) விசாரணைக்கு வருகிறது.
இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடக்கம்!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை தொடங்கியவுடன் 685 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 200 புள்ளிகளும் சரிவை சந்தித்தன.
ராகுலுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!
”மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ பிரார்த்திக்கிறேன்.” என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ், ஸ்லோவாக்கியா பயணத்திற்குப் பிறகு நாடு திரும்பினார் பிரதமர் மோடி!
பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய இரு நாடுகளுக்கான தனது அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி வியாழக்கிழமை (ஜூன் 18) தில்லி திரும்பினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.