மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!
மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானத்து ஆதரவு தெரிவித்த கட்சிகள் பற்றி...
மேக்கேதாட்டு அணைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவிரி குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.
தொடர்ந்து, தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களும் உரையாற்றி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த தீர்மானத்துக்கு காங்கிரஸ், விசிக, மதிமுக, மமக, கொமதேக, மஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அப்போது விவாதத்தில் கலந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:
”தமிழ்நாட்டுக்கு முக்கியமான இந்த தீர்மானத்தை யாரும் எதிர்க்க போவதில்லை. அனைவரும் ஒன்றாகதான் இருப்போம். சுதந்திரம் வாங்கிய காலத்தில் இருந்து மீனவர்கள் பிரச்னை, காவிரி நீர் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறோம்.
தமிழ்நாடு மக்களின் உரிமையை நாம் ஒவ்வொரு முறையும் சுற்றியுள்ள மாநிலங்களை கேட்டுக்கொண்டேதான் இருக்கிறோம். தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு மாற வேண்டும்.
முதல்வராக இருந்த ஜெயலலிதா, கருணாநிதி, மு.க. ஸ்டாலின் என அனைவரும் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
தாய்ப் பால் போல் தண்ணீர் முக்கியமானது. மின்மிகை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கியதை போல், மின்மிகை நீர் மேலாண்மையை நாம் உருவாக்க வேண்டும். இனிவரும் மழைக்காலத்துக்கு முன்னதாக நீர் மேலாண்மையை யோசிக்க வேண்டும். தமிழ்நாட்டில் எங்கெல்லாம் நதிகளை இணைக்க முடியுமோ, அதை செய்ய வேண்டும்.
அனைத்துப் பகுதிகளையும் தூர்வார வேண்டும். மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
Resolution against the Mekedatu dam! DMDK and PMK extend support!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.