பிளஸ் 2 முடிவுகள்: 98.05% பெற்று சிவகங்கை சாதனை!
பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில், கடந்த ஆண்டில் 6 ஆம் இடத்திலிருந்து 2 ஆம் இடத்துக்கு சிவகங்கை முன்னேற்றம்
பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில், கடந்த ஆண்டில் 6 ஆம் இடத்திலிருந்த சிவகங்கை மாவட்டம், தற்போது 2 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதியவர்களில் 95.2% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.19% பேரும், மாணவிகள் 97% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதுமட்டுமின்றி, கடந்தாண்டில் ஆறாம் இடத்திலிருந்த சிவகங்கை மாவட்டம், இந்தாண்டில் 98.05 சதவிகிதத்துடன் இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளது. மேலும், அரசுப் பள்ளிகளிலும் 96.97 சதவிகிதத்துடன் மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
Advertisement
Advertisement
சிவகங்கை மாவட்டத்தில் 7,265 மாணவர்களும், மாணவிகளில் 8,718 பேரும் என மொத்தம் 15,983 பேர் பிளஸ் 2 தேர்வெழுதினர். இவர்களில் மாணவர்கள் 7, 062 பேரும் (97.21%), மாணவிகள் 8,609 பேரும் (98.75%) என மொத்தம் 15,671 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதத்தில் 98.87 சதவிகிதத்துடன் ஈரோடு முதலிடமும், சிவகங்கை 98.05 சதவிகிதத்துடன் இரண்டாமிடத்திலும், கன்னியாகுமரி 97.63 சதவிகிதத்துடன் மூன்றாமிடமும், திருநெல்வேலி 97.54 சதவிகிதத்துடன் நான்காம் இடத்திலும், திருச்சி 97.50 சதவிகிதத்துடன் ஐந்தாம் இடமும் பெற்றுள்ளன.
தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
Plus 2 Results: Sivagangai Sets Record with 98.05%!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.