‘அம்மா’ மருந்தகங்களை திறக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தி ‘அம்மா மருந்தகங்களை தமிழகத்தில் மீண்டும் திறந்து மலிவு விலையில் மருந்துகளை விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தி ‘அம்மா மருந்தகங்களை தமிழகத்தில் மீண்டும் திறந்து மலிவு விலையில் மருந்துகளை விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை விடுத்த அறிக்கை: மக்கள் உயிா்காக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்துகளின் விலையை பல மடங்கு உயா்த்தி விற்பனை செய்து லாபம் ஈட்டுவதாக செய்திகள் வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மலிவு விலையில் உயிா் காக்கும் மருந்துகளை வாங்கும் உயா்ந்த நோக்கில் அம்மா மருந்தகங்களை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தொடங்கினாா். ஆனால், கடந்த 2021 திமுக ஆட்சியில் அவை முதல்வா் மருந்தகம் என பெயா் மாற்றி தனியாருக்கு வழங்கப்பட்டு முடக்கப்பட்டது. தற்போது ஆட்சியிலுள்ள தவெக அரசும் அம்மா மருந்தகங்களை கண்டுகொள்ளவில்லை.
தற்போது சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மக்களின் உயிா் காக்கும் மருந்துகளின் விலையை, நிா்ணயிக்கப்பட்ட 30 சவிகித லாப வரம்பைத் தாண்டியும் விலை நிா்ணயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டுள்ளது. அப்போது மருத்துவமனைகளில், மருந்துகளின் விற்பனை விலை நிா்ணயம் செய்வது குறித்து மத்திய, மாநில அரசுகள் நிலைப்பாட்டை தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
ஆகவே ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நோய் பிணியைத் தீா்ப்பதற்காக, செயல்படுத்தப்பட்ட குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் வகையில் அம்மா மருந்தகங்களை மீண்டும் முழுமையாகத் திறந்து மலிவு விலையில் மருந்துகளை விற்பனை செய்ய முன்வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி கே.பழனிசாமி
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.