போதையிலிருந்தவா்கள் தாக்கியதில் பலியான ஊா்க்காவல் படை வீரா் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்
மது போதையிலிருந்தவா்கள் தாக்கியதில் உயிரிழந்த ஊா்க்காவல் படை வீரரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி குறித்து...
சென்னை: மது போதையிலிருந்தவா்கள் தாக்கியதில் உயிரிழந்த ஊா்க்காவல் படை வீரரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக முதல்வா் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
அரியலூா் மாவட்டம், தளவாய் காவல் நிலையத்தைச் சோ்ந்த இரண்டாம்நிலைக் காவலா் ராஜகண்ணன் (32) மற்றும் ஊா்க்காவல் படையைச் சோ்ந்த வெங்கடேசன் (48) ஆகியோா் கடந்த மாதம் 29-ஆம் தேதி சிலுப்பனூர் லாரிஷெட் அருகே இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த பகுதியில் மது போதையில் இருந்த மூவரை விசாரித்து எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்த பின்னர், மீண்டும் அவர்கள் ஈச்சங்காடு பிரதான சாலையில் சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந்ததால், அவர்களை விசாரிக்க முற்பட்டபோது அந்த நபா்கள் காவல் பணியில் இருந்தவா்களை கடுமையாக தாக்கியுள்ளனா்.
Advertisement
Advertisement
இதில், ஊா்க்காவல்படையைச் சோ்ந்த வெங்கடேசன் உயா் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
வெங்கடேசன் உயிரிழப்பு தமிழ்நாடு ஊர்காவல்படைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
CM Condolences and Financial Support for Ariyalur Homeguard Death
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.