வானிலை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு நாளை (நவ. 2) மழை!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் வங்கக் கடலில் அர்னாப் புயல் உருவானது. இந்தப் புயல் ஆந்திரத்தை நோக்கிச் சென்று கரையைக் கடந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது முரசு புயல் உருவாகியுள்ளது.
இந்தப் புயல் தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தீவிர புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
மேலும், நவ. 3 ஆம் தேதி நெல்லூர் - நர்சபூர் இடையே பலத்த காற்றுடன் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாக வடதமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மழை குறித்து பதிவிட்டுள்ளதாவது:
''முரசு புயல் தீவிரமடைந்து, ஆந்திரத்தின் காவலி பகுதிக்கு அருகில் தெற்கு ஆந்திரக் கடற்கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை (நவ. 2) காலை முதல் மழை பெய்யக்கூடும். அதிகனமழை பெய்யக்கூடிய பகுதி பெரும்பாலும் கடற்பகுதியிலேயே நகர்ந்து விடுகிறது. இதனால் நிலப்பகுதியில் பெரிய அளவில் மழை இருக்காது.
வட சென்னையின் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் நல்ல மழை மேக கூட்டங்கள் இருந்தால் கனமழை பெய்யலாம். மேலும், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மற்றும் பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.
Weather alert Rain expected tomorrow in Chennai, Kanchipuram, Thiruvallur, and Chengalpattu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.