FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அன்பில் மகேஸுக்கு நவ. 4 வரை போலீஸ் காவல்!

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு நவ. 4 வரை போலீஸ் காவல் வழங்கி உத்தரவு

அன்பில் மகேஸ் - ANI
பகிர்:

ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸை நவ. 4ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினருக்கு சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அன்பில் மகேஸை நான்கு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், மூன்று நாள்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அன்மில் மகேஸிடம் விசாரணை நடைபெறும்போது வழக்குரைஞர் உடன் இருக்கலாம், போக்குவரத்து நேரத்தைத் தவிர்த்து அனைத்து விசாரணையும் விடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

நவம்பர் 4ஆம் தேதி மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், காவல்துறை விசாரணைக்கு முன்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அன்பில் மகேஸுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், அன்பில் மகேஸை உடலாலும் மனதாலும் துன்புறுத்தக் கூடாது என்றும், அன்பில் மகேஸ் தரப்பு வழக்குரைஞர் பி.கே. பாபு விசாரணையின்போது, விசாரணையின்போது பேசப்படுவது கேட்காத தொலைவில் உடனிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப் பிரிவு போலீஸார் மனு தாக்கல் செய்திருந்தனா். அந்த மனுவில், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் முத்துக்குமாருக்கும், அன்பில் மகேஸுக்கும் இடையேயான தொடா்பு குறித்தும், பணப் பரிமாற்றங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளதால், அன்பில் மகேஸை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூா்த்தி முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது பிணை கோரி அன்பில் மகேஸ் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பிணை கோரிய மனுவுக்கு மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் நவ. 2-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் தாக்கல் செய்த மனுவுக்கு அன்பில் மகேஸ் தரப்பில் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்த போது, அன்பில் மகேஸை நவ. 4ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

summary

Police custody for Anbil Mahesh until Nov. 4!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments