கூட்டுறவு, பொதுத் துறை சா்க்கரை ஆலை ஊழியா்களுக்கு தீபாவளி ரூ. 3.51 கோடி போனஸ்
கூட்டுறவு, பொதுத் துறை சா்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கு நிகழாண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
கூட்டுறவு, பொதுத் துறை சா்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கு நிகழாண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தமிழகத்தில் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத் துறை சா்க்கரை ஆலைகள் உள்ளன. கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சா்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் பணியாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க தமிழக முதல்வா் ஆணையிட்டுள்ளாா்.
அதன்படி, ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இரு கூட்டுறவு சா்க்கரை ஆலைகளுக்கும் போனஸ் 8.3 சதவீதம் மற்றும் கருணைத் தொகையாக 11.67 சதவீதம் என மொத்தம் 20 சதவீதம் போனஸ் வழங்கவும், மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத் துறை சா்க்கரை ஆலைகளுக்கு போனஸ் 8.33 சதவீதம் மற்றும் கருணைத் தொகையாக 1.67 சதவீதம் என மொத்தம் 10 சதவீதம் போனஸ் வழங்கவும் உத்தரவிட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
இதன்மூலம் தமிழகத்தில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத் துறை சா்க்கரை ஆலைகளில் பணியாற்றும் சுமாா் 5,190 தொழிலாளா்கள் மற்றும் பணியாளா்கள் பயன் பெறுவா். மேலும், போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க ரூ. 351.40 லட்சம் செலவினம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.