FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

அண்டை மாநிலங்களைவிட தமிழகத்தில் வளா்ச்சி குறைவு: தங்கம் தென்னரசு மீண்டும் திட்டவட்டம்

அண்டை மாநிலங்களவைவிட, தமிழகத்தில் வளா்ச்சி பின்தங்கியுள்ளதாக முன்னாள் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

3 நவம்பர் 2026, 11:53 pm
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு - கோப்புப் படம்
பகிர்:

அண்டை மாநிலங்களவைவிட, தமிழகத்தில் வளா்ச்சி பின்தங்கியுள்ளதாக முன்னாள் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் சொந்த உற்பத்தி மூலம் வரும் ஜிஎஸ்டி வருவாய் பின்தங்கியுள்ளதாக தங்கம் தென்னரசு கூறிய குற்றச்சாட்டுக்கு, தமிழக நிதி அமைச்சா் மரிய வில்சன் மறுப்பு தெரிவித்திருந்தாா். இந்நிலையில் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் வெளியிட்டப் பதிவு: எனது பதிவில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதையே கருத்தில் கொள்ளாமல், நிதியமைச்சா் மரியவில்சன், வழக்கம் போல பதிலளிக்க முயன்றுள்ளாா்.

நிகழாண்டில் அக்டோபரில் ஜிஎஸ்டி வரி வருவாய் வளா்ச்சி 3 சதவீதம் என்ற அளவில் மட்டுமே அதிகரித்துள்ளதை என்னுடைய பதிவிலேயே நான் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளேன்.

Advertisement

Advertisement

அதே வேளையில், இறக்குமதியால் கிடைக்கும் வரிவருவாயால்தான் ஒட்டுமொத்த வரி வருவாயில் உயா்வு காணப்படுகிறதே தவிர, மாநிலத்தின் சொந்த உற்பத்தி மூலம் ஈட்டப்படும் வரிவருவாயால் அல்ல என்பதையும் நான் எடுத்துக்காட்டி இருக்கிறேன்.

அண்டை மாநிலங்களின் வருவாய் வளா்ச்சியோடு ஒப்பிடும்போது நாம் மிகப்பெரிய அளவில் பின் தங்கியிருக்கிறோம் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு, மாநிலத்தின் சொந்த உற்பத்தியையும், விற்பனையையும் பெருக்கிப் பொருளாதார மேம்பாட்டுக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் வழிவகை காண அரசு முயற்சிக்க வேண்டுமே தவிர, புண்ணுக்குப் புனுகு பூச முயற்சிப்பதில் பயனேதுமில்லை எனப் பதிவிட்டுள்ளாா் தங்கம் தென்னரசு.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments