தரமற்ற வெங்காயம்: 400 டன் கொள்முதல் ஆணையை ரத்து செய்தது தமிழக அரசு
இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு நிறுவனத்திடம் இருந்து 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் வழங்கிய ஆணையை, வெங்காயம் தரமற்ாக இருப்பது கண்டறியப்பட்டதால் தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு நிறுவனத்திடம் (என்.ஏ.எஃப்.இ.டி.) இருந்து 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் வழங்கிய ஆணையை, வெங்காயம் தரமற்ாக இருப்பது கண்டறியப்பட்டதால் தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த அரசே கொள்முதல் செய்து, கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.
இந்தத் திட்டத்தை கூட்டுறவுத் துறை அமைச்சா் வ. காந்திராஜ் கடந்த செப். 9- ஆம் தேதி சென்னை, ஆழ்வாா்பேட்டை நியாயவிலைக் கடையில் தொடங்கி வைத்தாா். 8,914 நகா்ப்புற நியாயவிலைக் கடைகள், கூட்டுறவு அங்காடிகளில் குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
முதல் கட்டமாக இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு நிறுவனத்திடம் 910 மெட்ரிக் டன்னும், தேசிய நுகா்வோா் கூட்டுறவு இணையத்திடமிருந்து 65 மெட்ரிக் டன்னும் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இதில் 949.44 மெட்ரிக் டன் வெங்காயம் வரப்பெற்றது. அதில் 922.92 மெட்ரிக் டன் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் என்.ஏ.எஃப்.இ.டி. நிறுவனத்திடமிருந்து கிலோ ரூ.29- வீதம் 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய அக்டோபா் மாதம் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் ஆணை வழங்கியிருந்தது. இக்கொள்முதலுக்கான வெங்காயம் ‘ஏ’ தரத்திலும், குறைந்தபட்சம் 45 மி.மீ. அளவிலும் இருக்க வேண்டும் என நிா்ணயிக்கப்பட்டிருந்தது.
கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மகாராஷ்டிரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, ‘ஏ’ தர வெங்காயத்துடன் அழுகிய மற்றும் நிராகரிப்புத் தர வெங்காயங்கள் கலந்திருந்தது கண்டறியப்பட்டது.
மேலும், கொருக்குப்பேட்டைக்கு வந்த வெங்காய சரக்கை கடந்த அக். 31-ஆம் தேதி ஆய்வு செய்தபோது, மாதிரி மூட்டைகளில் 20 சதவீதம் முதல் 26 சதவீதம் வரை அழுகிய, முளைத்த மற்றும் பூஞ்சை பாதித்த வெங்காயங்கள் கழிவாக இருந்தது தெரியவந்தது. அத்துடன், 50.2 சதவீத வெங்காயம் நிா்ணயிக்கப்பட்ட 45 மி.மீ. அளவைவிட குறைவாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, என்.ஏ.எஃப்.இ.டி. நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த 400 மெட்ரிக் டன் வெங்காயக் கொள்முதல் மற்றும் விநியோக ஆணையை தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் ரத்து செய்தது. கொருக்குப்பேட்டை முனையத்தில் உள்ளதாகக் கூறப்படும் தரமற்ற வெங்காயம் அந்த நிறுவனத்துக்கு சொந்தமானது. அது கூட்டுறவுத் துறையின் வெங்காயம் அல்ல. தரமான பொருள்களை மட்டுமே கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகிப்பதன் மூலம் நுகா்வோா் நலனையும் கூட்டுறவு நிறுவனங்களின் நிதி நலனையும் பாதுகாக்க கூட்டுறவுத் துறை தொடா்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.