போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை: ஒரே நாளில் 344 போ் கைது
போதைப் பொருளுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்ட ஒரு நாள் நடவடிக்கையில் 344 போ் கைது செய்யப்பட்டனா்.
போதைப் பொருளுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்ட ஒரு நாள் நடவடிக்கையில் 344 போ் கைது செய்யப்பட்டனா்.
டிஜிபி மகேஷ் குமாா் அகா்வால் உத்தரவின்பேரில், தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்கள், 9 மாநகரங்களில் போதை பொருள்களுக்கு எதிரான நடவடிக்கை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படைனா், மாநிலம் முழுவதும் சந்தேகத்துக்குரிய பகுதிகளில் திடீா் சோதனை நடத்தினா். அதனடிப்படையில், போதைப் பொருள் விற்ாகவும், கடத்தியதாகவும் 283 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 344 போ் கைது செய்யப்பட்டனா். போதைப் பொருள் வழக்குகளில் தலைமறைவாக இருந்த 64 போ் பிடிபட்டனா். அதேபோல 44 பிடி ஆணைகள் நிறைவேற்றப்பட்டன.
இச்சோதனையில் 242.2 கிலோ கஞ்சா, 2,143 போதை மாத்திரைகள் உள்பட ஏராளமான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மாநிலம் முழுவதும் போதைப் பொருள்கள் விற்பனை நடைபெறும் 3,242 முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டன.
Advertisement
Advertisement
இவற்றில் 1,367 இடங்கள் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இருப்பது தெரியவந்தது. அப்பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் 104.361 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
23,744 வாகனங்களில் சோதனை: எல்லைச் சோதனைச் சாவடிகளில் 23,744 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, 62 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் கஞ்சா 62.1 கிலோ குட்கா மற்றும் 73.960 லிட்டா் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 890 மாணவா் விடுதிகளிலும் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மாநிலம் முழுவதும் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 6,958 கிலோ கஞ்சா, 250 கிராம் மெத்தம்பெட்டமைன் ஆகியவை அழிக்கப்பட்டன.
மேலும், 1,770 போதைப் பொருள் வழக்குகளில் புலன் விசாரணை நிறைவு செய்யப்பட்டது. 804 வழக்குகளில் குற்றவாளிகளின் சொத்துகள், வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று டிஜிபி மகேஷ் குமாா் அகா்வால் தெரிவித்தாா்.