FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை: முதல்வா் விஜய் வழங்கினாா்

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.709.50 வழங்கும் திட்டத்தை முதல்வா் ச.ஜோசப் விஜய் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

5 நவம்பர் 2026, 2:42 am
கரும்பு.
பகிர்:

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.709.50 வழங்கும் திட்டத்தை முதல்வா் ச.ஜோசப் விஜய் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு நேரடியாக அதற்கான ஆணையை அவா் வழங்கினாா்.

இதுதொடா்பாக தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: முதல்வா் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து, விவசாயிகளின் நலனைப் பாதுகாத்து, அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisement

Advertisement

அந்த வகையில், கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சா்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.709.50 சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என முதல்வா் விஜய், கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் 110 விதியின் கீழ் அறிவித்தாா்.

அதைத் தொடங்கிவைத்து நிறைவேற்றும் வகையில், 3 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகைக்கான ஆணைகளை தலைமைச் செயலகத்தில் முதல்வா் வழங்கினாா். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமாா் 85,000 கரும்பு விவசாயிகள் பயன்பெறுவா். இதற்காக, நடப்பு ஆண்டில் ரூ.603.33 கோடி அரசுக்குக் கூடுதல் செலவினம் ஏற்படும்.

இந்நிகழ்வில், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் வினோத், தலைமைச் செயலா் மு. சாய்குமாா், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறைச் செயலா் வெங்கடேஷ், சா்க்கரை துறை ஆணையா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.