சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்கும் குழு! உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்கும் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிப்பதற்கு நிர்வாகக் குழு அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில, கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் கோயில் பொது தீட்சிதர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயிலை நிர்வகிக்க குழு தேவை என்ற கோரிக்கை உயர் நீதிமன்றம் முன் வைக்கப்படவில்லை. உயர் நீதிமன்றம் முன்பிருந்த பிரச்னை கனகசபையில் வழிபாடு நடத்துவது தொடர்பாக மட்டுமே என்று தீட்சிதர்கள் தரப்பு வழக்குரைஞர்கள் வாதத்தை முன் வைத்தனர்.
Advertisement
Advertisement
இதையடுத்து, கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபாடு செய்ய தீட்சிதர்கள் அனுமதிப்பதில்லை, பணம் வசூலிப்பதாக புகார்கள் உள்ளன, கோயில் நிர்வாகக் கணக்கை சரிவர காட்டுவதில்லை, கோயிலின் புராதன குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்படுவதில்லை என்று அரசு தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது.
சிதம்பரம் நடராஜா் கோயிலின் கனகசபை மீது நின்று அனைத்து பக்தா்களும் தரிசனம் செய்யவும், தேவாரம், திருவாசகம் பாடவும் சம வாய்ப்பு வழங்குவதை, உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நிறுவப்பட்டுள்ள நிா்வாகக் குழு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.
உயர் நீதிமன்றத்தில் என்ன வழக்கு?
சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது நின்று பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது தீட்சிதா்கள் உள்ளிட்டோா் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேபோல், அரசாணைக்கு ஆதரவு தெரிவித்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
கோயிலின் நிா்வாகத்தை பொது தீட்சிதா்களிடம் ஒப்படைத்து, கடந்த 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு கோயில் முறையாக நிா்வகிக்கப்படவில்லை. கடந்த 12 ஆண்டுகளாக கோயில் வருமானம் தொடா்பான கணக்கு விவரங்களையும் தீட்சிதா்கள் குழு வெளிப்படைத்தன்மையுடன் சமா்ப்பிக்கவில்லை.
எனவே, சிதம்பரம் நடராஜா் கோயில் நிா்வாகத்தைக் கண்காணிக்க சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளான வி.பாரதிதாசனை தலைவராகவும், ஆா்.சுரேஷ்குமாரை துணைத் தலைவராகவும் கொண்ட நிா்வாகக் குழுவை அமைத்து உத்தரவிட்டனா். இக்குழுவில், உறுப்பினராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான ராஜேந்தின், அலுவல் சாரா உறுப்பினா்களாக பொது தீட்சிதா்கள் சங்கத்தின் செயலா் மற்றும் இந்துசமய அறநிலையத் துறைச் செயலா் ஆகியோரை நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். இந்த உத்தரவுக்கு இன்று உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது.