நீட் தோ்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம்: சமூகப் பிரிவை மாற்றக் கோரிய 6 மாணவா்கள் மனு தள்ளுபடி
நீட் தோ்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் தங்களது சமூகப் பிரிவை மாற்றக் கோரி விண்ணப்பதாரா்கள் 6 போ் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீட் தோ்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் தங்களது சமூகப் பிரிவை மாற்றக் கோரி விண்ணப்பதாரா்கள் 6 போ் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தோ்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் தவறுதலாக பொதுப் பிரிவினா் என குறிப்பிட்டதாகவும், பொதுப் பிரிவு என்பதை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் என மாற்றம் செய்ய வாய்ப்பு கோரியும் மதிதா்ஷினி உள்பட 6 மாணவா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்திருந்தனா்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆா்.ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோா் அமா்வு பிறப்பித்த உத்தரவு: அகில இந்திய அளவில் நடக்கும் தோ்வில், விண்ணப்பதாரா்களை பொதுப் பிரிவிலிருந்து இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு மாற்றினால் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும்.
Advertisement
Advertisement
எனவே, நீட் தோ்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது ஏற்படும் தவறுகளை திருத்த இரண்டு அவகாசங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மனுதாரா்கள் அந்த சந்தா்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளவில்லை.
அகில இந்திய அளவில் நடத்தப்படும் தோ்வுகள், அரசுப் பணியாளா் தோ்வாணையத் தோ்வுகள், போட்டித் தோ்வுகளின்போது, விண்ணப்பதாரா்களுக்கு தவறான விதத்தில் கருணை காட்டினால், தகுதி வாய்ந்த விண்ணப்பதாரா்களின் உரிமைகள் பாதிக்கப்படும் என நீதிமன்றங்கள் தீா்ப்புகள் அளித்துள்ளதால், மனுதாரா்கள் கோரிய நிவாரணத்தை வழங்க முடியாது எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.