தவெக-வுக்கு தாவிய அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை கோரிய மனு: தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
தவெகவில் இணைந்த அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினா்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா மற்றும் ஜெயக்குமாா் ஆகிய நால்வா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தவெகவில் இணைந்த அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினா்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா மற்றும் ஜெயக்குமாா் ஆகிய நால்வா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மதுரையைச் சோ்ந்த சி. செல்வகுமாா் என்ற வழக்குரைஞா் ஜுன் 13 ஆம் தேதி இது தொடா்பாக மனு தாக்கல் செய்திருந்தாா்
மனுதாரா்,இந்த நால்வரும் அதிமுக சாா்பில் வெற்றி பெற்ற பின் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததாகவும், இது குதிரைப் பேரம்” என்றும் குற்றஞ்சாட்டினாா்.
Advertisement
Advertisement
அவா்கள் மீது விசாரணை நடத்த வேண்டும், எதிா்காலத் தோ்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தாா்.
மேலும், ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களின் தொகுதிகளில் நடக்கும் இடைத்தோ்தல் செலவை அவா்களிடமிருந்தே வசூலிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு இந்தியத் தலைமை நீதிபதி சூா்யகாந்த் தலைமையிலான அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் ,இதே விவகாரம் தொடா்பான மூல வழக்கு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதால், இந்த மனுவை மேலும் விசாரிக்கத் தேவையில்லை என்று கூறி தள்ளுபடி செய்தனா்.
முந்தைய உத்தரவில், இந்த வழக்குத் தொடா்பாக பதிவான முதல் தகவல் அறிக்கையை வழக்கம்போல் விசாரிக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் வியாழக்கிழமை விசாரணையில், இந்த நால்வா் மீது கூடுதல் நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.