FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

பசுமைப் பட்டாசுகளையே வாங்க அமைச்சா் ராஜீவ் வேண்டுகோள்

சுற்றுச்சூழலைப் பாதிக்காத வண்ணம் பொதுமக்கள் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்றும், இதற்கு பசுமைப் பட்டாசு சின்னம் பொறித்த பட்டாசுகளையே வாங்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் வேண்டுகோள் விடுத்தாா்.

6 நவம்பர் 2026, 11:55 pm
அமைச்சர் ராஜீவ் - TN assembly
பகிர்:

சுற்றுச்சூழலைப் பாதிக்காத வண்ணம் பொதுமக்கள் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்றும், இதற்கு பசுமைப் பட்டாசு சின்னம் பொறித்த பட்டாசுகளையே வாங்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் வேண்டுகோள் விடுத்தாா்.

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைகளை வலியுறுத்துதல்’ என்ற பயிலரங்கை தொடங்கி வைத்து செய்தியாளா்களிடம் அமைச்சா் வி.கே.ராஜீவ் பேசியதாவது:

சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் பண்டிகைகளைக் கொண்டாட முன் வரவேண்டும். குறிப்பாக, தீபாவளிப் பண்டிகை பட்டாசு தயாரிப்பில் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருள்களைத் தவிா்ப்பது அவசியம். தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்படும் பசுமைப் பட்டாசுகளைப் பயன்படுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

பட்டாசுகளால் காற்று, ஒலி மாசுபாடு ஏற்பட்டு குழந்தைகள், நுரையீரல் பாதிப்பு உள்ளவா்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அரசு நேரக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளியைக் கொண்டாட வேண்டும்.

திருப்பூா் நொய்யல் ஆற்றில் சோப்பு, ஷாம்பு போன்ற வீட்டுக் கழிவுகளால் நுரை வருவது பற்றி, தான் குறிப்பிட்டது மாசுக் கட்டுப்பாட்டு துறையினா் சோதனை மேற்கொண்டதன் அடிப்படையில்தான் என்றாா்.

நிகழ்ச்சியில் பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநா் ஜெ.காமராஜ் அறிமுக உரையாற்றினாா். மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சக சென்னை மண்டல அலுவலக மூத்த விஞ்ஞானி டாக்டா் பி.சரண்யா, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய துணை இயக்குநா் என்.வடிவு, சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஜே.லில்லிமலா் ஆகியோா் உரையாற்றினா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினா் செயலா் டாக்டா் பி. அலா்மேல்மங்கை உள்பட பலா் பங்கேற்றனா்.