இரவு 7 மணி வரை 20 மாவட்டங்களில் மழை! (நவ. 9)
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பற்றி...
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, தேனி, திருவள்ளூர், திருப்பூர், விருதுநகர், திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
summary