மானாமதுரை அருகே ஜாமீனில் வந்த ரௌடி வெட்டிக் கொலை
மானாமதுரை அருகே ஜாமீனில் வெளியே உள்ள ரௌடி விக்னேஷ்(23) வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து...
மானாமதுரை அருகே வேலூர் கிராமத்தில் கொலை வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே உள்ள ரௌடி விக்னேஷ்(23) வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் வேலூர் கிராமத்தில் கொலை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீனில் வெளியே உள்ள நிலையில், மர்ம கும்பல் வெட்டியதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் முனீஸ்வரன் பலத்த காயமடைந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மானாமதுரை சிப்காட் போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த முனீஸ்வரனை மீட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement
Advertisement
விக்னேஷ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில ஆண்டுக்கு முன்பு இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆவது குற்றவாளியாக கைதாகி இருந்தார் விக்னேஷ்.