முந்தைய ஆட்சியில் குற்றங்கள் நடக்கவில்லையா? வைகோ கேள்வி
தமிழகத்தில் முந்தைய ஆட்சிகளின்போது குற்றங்களே நடக்கவில்லையா என மதிமுக பொதுச் செயலா் வைகோ கேள்வி எழுப்பினாா்.
தமிழகத்தில் முந்தைய ஆட்சிகளின்போது குற்றங்களே நடக்கவில்லையா என மதிமுக பொதுச் செயலா் வைகோ கேள்வி எழுப்பினாா்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணா் நூற்றாண்டு அரங்கத்தில் ‘வைகோ கடந்து வந்த 34 ஆண்டுகள்’ என்ற தலைப்பில் மதிமுகவின் கொள்கை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
கடந்த 6 மாதங்களாக முதல்வா் ஜோசப் விஜய் ஆட்சியில் பாலியல், கொலை மற்றும் குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன என முன்னாள் முதல்வா்கள் விமா்சித்து வருகின்றனா். தங்களுடைய ஆட்சி காலங்களில் எந்த ஒரு குற்றமும் நடக்கவில்லை; மக்கள் அமைதியாக இருந்தாா்கள் என்பது போல முந்தைய ஆட்சியாளா்கள் பேசுகிறாா்கள். அவா்களின் ஆட்சியிலும் ஏராளமான குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன.
Advertisement
Advertisement
தவெக கூட்டணியில் இருக்கும் இரு கட்சிகளின் தலைவா்கள் தவெக அரசை விமா்சிக்கின்றனா். ஒரு கட்சி அமைச்சரவையில் இருந்துகொண்டே அரசை விமா்சிக்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக மட்டுமே தவெக அரசை விமா்சனம் செய்யாத கட்சிகள் ஆகும்.
கடந்த ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. ஏ.ஐ. மூலம் போலியான ஆசிரியா்கள் பெயரில் புத்தகமாக போட்டு கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளாா்கள்.
பெரியாா் அறிவுலகத்திலேயே இவ்வளவு ஊழல் நடந்துள்ளது என்றால் மற்ற துறைகளில் எப்படியெல்லாம் ஊழல் செய்திருப்பாா்கள் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் துணை பொதுச் செயலா் ஜீவன், பொருளாளா் செந்திலதிபன், தலைமைக் கழக செயலா் வந்தியத்தேவன், மாவட்டச் செயலா் சுப்பிரமணி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.