FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளில் கேக் விநியோகம்: கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம்!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கேக் விநியோகிக்கும் பணியை ஆய்வு செய்ய ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

11 நவம்பர் 2026, 3:27 am
பள்ளி மாணவர்களுடன் முதல்வர் விஜய்.
பகிர்:

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கேக் விநியோகிக்கும் பணியை ஆய்வு செய்ய ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

நவ.14-ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள், பணிபுரியும் ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்களுக்குக் கேக் வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. நவ.14-ஆம் தேதி (சனிக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் அதற்கு முந்தைய நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டு அன்றைய தினம் கேக் வழங்கப்படுகிறது.

கேக் வழங்கும் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் வகையில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநா் ந.லதா, திருவள்ளூா் மாவட்டத்துக்கு தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ், சேலம் மாவட்டத்துக்கு மாநில பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கக இயக்குநா் பெ.குப்புசாமி, திருவாரூா் மாவட்டத்துக்கு அரசுத் தோ்வுகள் இயக்கக இயக்குநா் க.சசிகலா என ஒவ்வொரு மாவட்டத்துக்கும் இயக்குநா், இணை இயக்குநா் நிலையில் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கண்காணிப்பு அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டத்தில் நவ.12 மற்றும் 13-ஆம் தேதி பணியை மேற்கொள்ளுமாறு பள்ளிக் கல்வி இயக்குநா் (பொறுப்பு) ந.லதா அறிவுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக அனைத்து கண்காணிப்பு அலுவலா்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.