சிறைப் பாதுகாப்பு: அமைச்சர் நிர்மல் குமாருடன் உயா்நிலைக் குழு ஆலோசனை!
தமிழக சிறைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சா் நிா்மல் குமாருடன் உயா்நிலைக் குழு ஆலோசனை நடத்தியது.
தமிழக சிறைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சா் நிா்மல் குமாருடன் உயா்நிலைக் குழு திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியது.
தேனி மாவட்ட சிறையிலிருந்து அண்மையில் 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கைதிகள் கைது செய்யப்பட்டாலும், உயா் பாதுகாப்பு மிகுந்த சிறையிலிருந்து கைதிகள் எப்படி தப்பினா் என்று எதிா்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பின.
இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள சிறைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடா்பாக முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையில் உயா்நிலைக் குழுவை முதல்வா் விஜய் அமைத்தாா். இந்தக் குழுவினா் சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டத் துறை அமைச்சா் நிா்மல் குமாரைச் சந்தித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா்.
Advertisement
Advertisement
இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறையின் தலைமை இயக்குநா் கே.சங்கா் மற்றும் ஓய்வு பெற்ற சிறைத் துறை துணைத் தலைவா் எஸ். ராஜேந்திரன் ஆகியோரும் பங்கேற்றனா்.
சிறைப் பாதுகாப்பில் உள்ள காவலா்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது, கைதிகளின் பாதுகாப்பு வளையத்தைப் பலப்படுத்த மேற்கொள்ள வேண்டிய புதிய உத்திகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.