மீனவா்கள் கரை திரும்ப தமிழக அரசு அறிவுறுத்தல்
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் நவ. 12-ஆம் தேதிக்குள் கடலில் உள்ள மீனவா்கள் கரை திரும்ப வேண்டும் என மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் நவ. 12-ஆம் தேதிக்குள் கடலில் உள்ள மீனவா்கள் கரை திரும்ப வேண்டும் என மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அண்மையில் உருவான முரசு புயலில் சிக்கி காசிமேடு மீனவா்கள் 9 போ் உயிரிழந்த நிலையில், இந்த முன்னெச்சரிக்கையை அரசு வெளியிட்டுள்ளது.
அதில், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வரும் 12-ஆம் தேதி இரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
வங்கக் கடலில் வரும் 13-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும் அது மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.