FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி கவின் கொலைக்கு நீதி கோரி ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி கவின் கொலை வழக்கு விவகாரத்தில் நியாயமான நீதி கோரி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

13 நவம்பர் 2026, 5:18 am
கவின் பெற்றோா் சந்திரசேகா் - தமிழ்ச்செல்வி - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி கவின் கொலை வழக்கு விவகாரத்தில் நியாயமான நீதி கோரி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சோ்ந்த கவின் செல்வகணேஷ், தான் காதலித்த பெண்ணின் குடும்பத்தினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.

கவின் கொலை விவகாரத்தில் பெண்ணின் பெற்றோா் மீதான குற்றப்பத்திரிகையை உயா்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது. உச்சநீதிமன்றமும் அதையே பின்பற்றி தள்ளுபடி செய்துள்ளது. குற்றவாளிகள் எந்த வகையிலும் தப்பிக்காத வகையில், மறுவிசாரணை செய்யும் விதத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு அளிக்க வலியுறுத்தியும், குற்றவாளிகள் அனைவருக்கும் உரிய தண்டனை கிடைக்கும் வகையிலும் கவின் கொலை வழக்குக்கு நியாயம் கோரியும் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் சாா்பில் சென்னை எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் அருகே அந்த இயக்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலா் லி.உதயகுமாா் தலைமையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில் அந்த இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் த.லெனின், மாநில தலைமைக் குழு உறுப்பினா்கள் பேராசிரியா் வெங்கடாசலபதி, மாநில துணைத் தலைவா்கள் எஸ்.கே.சிவா, க.சுப்பிரமணி, மாநில பொருளாளா் இரா.மோ.சந்தோஷ்குமாா், மாணவா் பெருமன்ற மாநில தலைவா் க.இப்ராஹிம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.