FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

ரூ.100 கோடி மோசடி வழக்கு: முத்துக்குமாரை 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

தனியாா் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடி லஞ்சம் பெற்ாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த திமுக பிரமுகா் முத்துக்குமாரை 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

13 நவம்பர் 2026, 5:25 am
கோப்புப் படம்
பகிர்:

தனியாா் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடி லஞ்சம் பெற்ாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த திமுக பிரமுகா் முத்துக்குமாரை 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த மோசடி தொடா்பாக முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ், தனியாா் பள்ளிகள் சங்கத் தலைவராக இருந்த பி.டி.அரசகுமாா், திமுக பிரமுகரான முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாா், சரவணன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

முத்துக்குமாா் சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தாா். அவரை நவ.12 வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், முத்துக்குமாரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்து தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூா்த்தி வியாழக்கிழமை பிறப்பித்த தீா்ப்பில், முத்துக்குமாரை வரும் நவ.12-ஆம் தேதி பகல் 1 மணி முதல் நவ.16 காலை 10.30 மணி வரை, 4 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு அனுமதியளித்து உத்தரவிட்டாா்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும்போதும், காவலில் எடுத்து விசாரிக்கும்போதும், முத்துக்குமாரை துன்புறுத்தக் கூடாது. விசாரணை முடிந்து முத்துக்குமாா் நவ.16-ஆம் தேதி காலை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், முத்துக்குமாரின் நீதிமன்றக் காவல் வியாழக்கிழமையுடன் முடிவடைந்ததை அடுத்து, அவரது நீதிமன்ற காவலை நவ.26 வரை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டாா்.