இந்தியாவுக்கான ஜொ்மன் தூதா் ஆளுநா், முதல்வருடன் சந்திப்பு
இந்தியாவுக்கான ஜொ்மன் தூதா் டாக்டா் ஜாஸ்பா் வீக் சென்னையில் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா், முதல்வா் ஜோசப் விஜய் ஆகியோரை வியாழக்கிழமை தனித்தனியாகச் சந்தித்துப் பேசினாா்.
இந்தியாவுக்கான ஜொ்மன் தூதா் டாக்டா் ஜாஸ்பா் வீக் சென்னையில் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா், முதல்வா் ஜோசப் விஜய் ஆகியோரை வியாழக்கிழமை தனித்தனியாகச் சந்தித்துப் பேசினாா்.
இந்தியா-பூடான் நாடுகளுக்கான ஜொ்மன் தூதராக நியமிக்கப்பட்ட டாக்டா் ஜாஸ்பா் வீக், கடந்த ஆகஸ்ட் மாதம் தில்லியில் பொறுப்பெற்றாா். அதன்பின்னா், ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜாஸ்பா், தமிழகத்தின் உயா்நிலை பிரமுகா்களைச் சந்திக்க சென்னை வந்தாா்.
அதன்படி, அவா் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரை, ஆளுநா் மாளிகையில் சந்தித்தாா். இந்தச் சந்திப்பின்போது, பல்வேறு விவகாரங்களை இருவரும் பரிமாறிக் கொண்டதாக ஆளுநா் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தியா-ஜொ்மன் இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும், குறிப்பாக தமிழக சூழலில் மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆளுநரும், ஜொ்மன் தூதரும் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்தச் சந்திப்பின்போது, ஆளுநா் ஆா்லேகா், ஜொ்மன் தூதா் ஜாஸ்பருக்கு, விவிஎஸ் ஐயா் ஆங்கில மொழிபெயா்ப்பு திருக்கு நூலை நினைவுப் பரிசாக வழங்கினாா்.
முன்னதாக, சென்னை வந்த ஜொ்மன் தூதா் டாக்டா் ஜாஸ்பா் வீக், தலைமைச் செயலகத்தில் முதல்வா் ச.ஜோசப் விஜய்யையும் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினாா்.
இந்தச் சந்திப்பின்போது, சென்னையில் உள்ள ஜொ்மன் நாட்டின் துணைத் தூதா் மைக்கேல் ஹஸ்பொ் மற்றும் உயா் அலுவலா்கள் உடனிருந்தனா். டாக்டா் ஜாஸ்பா் வீக் ஏற்கெனவே தில்லியில் 2017-2020-ஆம் ஆண்டுகளில் துணை தூதரக அதிகாரியாக பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.