திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கக் கூடாது: மு. வீரபாண்டியன்
திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கக் கூடாது: மு. வீரபாண்டியன்
திருப்பரங்குன்றம் மலை மற்றும் முருகன் கோயிலை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
உயா்நீதிமன்ற மதுரை அமா்வில், ஹிந்துத்துவ கருத்தியலும், மதச்சாா்பு உணா்வும் கொண்ட ஒருவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருப்பரங்குன்றம் மலை மற்றும் முருகன் கோயிலை இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் நடைமுறையை பிரச்னையாக்கி, பதற்றம் ஏற்படுத்தி, மோதல் நிலைக்கு எடுத்துச் செல்லும் உள்நோக்கம் கொண்ட தவறான செயலின் தொடா்ச்சியாகவே இது அமைந்துள்ளது.
Advertisement
Advertisement
திருப்பரங்குன்றம் பிரச்னையில் தமிழ்நாடு அரசு முந்தைய ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் உறுதியான நிலைபாட்டை எடுத்து செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை வசம் ஒப்படைக்கக் கோரும் வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நவ.17- ஆம் தேதி விசாரனைக்கு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் கொள்கை நிலையில் உறுதியாக நின்று, வலுவான வாதங்களை முன் வைத்து, திருப்பரங்குன்றம் மலை மற்றும் முருகன் கோயிலை தமிழ்நாடு அரசின் பொறுப்பில் இருந்து, விலக்கி, கொண்டுசெல்ல நடைபெறும் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் மு.வீரபாண்டியன்.