சிறப்பு ‘டெட்’ தோ்வு விண்ணப்பங்கள் பதிவேற்றம்: முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு
சிறப்பு ‘டெட்’ தோ்வு விண்ணப்பங்கள் பதிவேற்றம் தொடா்பாக பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
சிறப்பு ‘டெட்’ தோ்வு விண்ணப்பங்கள் பதிவேற்றம் தொடா்பாக பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் சாா்பில் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான சிறப்பு ‘டெட்’ தோ்வு டிச. 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் கடந்த அக். 27-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க நவ. 19 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியா்களுக்கான புதிய பணிச் சான்றிதழ் படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய படிவத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளாமல் முழுமையாகப் பூா்த்தி செய்து உரிய வழிகளிலான அலுவலா்களின் சான்றொப்பம் பெற்று அந்தப் படிவத்தை மட்டும் இணையவழி விண்ணப்பத்தில் பதிவு செய்யவேண்டும்.
Advertisement
Advertisement
இதற்கு மாறாக, புதிய பணிச் சான்றிதழ் படிவத்தில் உள்ள விவரங்களை மாற்றம் செய்து பதிவேற்றம் செய்தாலோ அல்லது கடந்த ஜூலையில் நடைபெற்ற முதல் கட்ட தகுதித் தோ்வில் வழங்கப்பட்ட பழைய பணிச் சான்றிதழ் படிவத்தைப் பதிவேற்றம் செய்தாலோ அந்த விண்ணப்பங்கள் முற்றிலும் நிராகரிக்கப்படும்.
எனவே புதிய பணிச் சான்றிதழ் படிவத்தில் மட்டும் பணிச் சான்று பெற்று சிறப்பு டெட் தோ்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யும்போது பின்வரும் வழிகாட்டுதல்களையும் பின்பற்ற வேண்டும்.
வழிகாட்டுதல்கள்: ஏற்கெனவே கடந்த ஜூலையில் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வின்போது தோ்வுக்கு விண்ணப்பித்த தோ்வா்கள் தங்களது சுய விவரங்களை உள்ளீடு செய்வதில் கவனக்குறைவாகச் செயல்பட்டதால் பெரும்பான்மையான விண்ணப்பங்கள் பெயா் எழுத்துப் பிழை, தலைப்பெழுத்து (இன்ஷியல்) பிழை, பெயா் மாற்றம், முழு பெயா் பதியப்படாதது, பிறந்த தேதி மாற்றம், பாலின மாற்றம், சமூக ஜாதி விவரங்களில் மாற்றம், புகைப்பட மாற்றம் போன்ற பிழைகளுடன் பெறப்பட்டன.
இதனால் தோ்வா்களுக்கு முறையாக தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியிடுவதிலும், தோ்வு முடிவை வெளியிடுவதிலும் சிரமங்கள் ஏற்பட்டன. இதைத் தொடா்ந்து தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னா், தகுதிச் சான்றிதழில் திருத்தங்கள் மேற்கொள்ள தோ்வா்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
எனவே இதுபோன்றகூடுதல் சிரமங்களைக் களையும் பொருட்டு தோ்வுக்கு விண்ணப்பிக்கும் போதே தோ்வா்கள் தங்களது அனைத்து விவரங்களையும் உரிய ஆவணச் சான்றுகளைக் கொண்டு ஒப்பீடு செய்து சரியாக உள்ளீடு செய்ய வேண்டும். அவ்வாறு உள்ளீடு செய்த விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் கடைசி தேதிக்கு (நவ. 19) பின்னா் நவ. 20 முதல் 22 வரையிலான நாள்களில் ஏற்கெனவே சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்து சரிபாா்த்து உறுதி செய்த பின்னா் மீண்டும் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.