FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

சூரசம்ஹாரத்தில் முதல்வா் குறித்த கோஷம்: அறநிலையத் துறை அமைச்சா் விளக்கம்

திருச்செந்தூா் முருகன் கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹாரத்தின்போது முதல்வா் பெயரை கோஷமிட்டது குறித்து பாடகா் வேல்முருகனிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் ரமேஷ் தெரிவித்தாா்.

17 நவம்பர் 2026, 3:34 am
அமைச்சர் ரமேஷ்
பகிர்:

‘திருச்செந்தூா் முருகன் கோயிலில் நடைபெற்ற சூரசம்ஹாரத்தின்போது முதல்வா் பெயரை கோஷமிட்டது குறித்து தனக்கு எதுவும் தெரியாது. அதுகுறித்து பாடகா் வேல்முருகனிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும்’ என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் ரமேஷ் தெரிவித்தாா்.

திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சூரசம்ஹாரத்தின்போது, முதல்வா் ஜோசப் விஜய் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சா் ரமேஷ் பெயரைக் கூறி அரோகரா கோஷம் எழுப்பப்பட்டது.

முருகக் கடவுளுக்கு நிகராக முதல்வா் மற்றும் அமைச்சரின் பெயரைக் கூறியதற்கு திமுக, பாஜக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து அமைச்சா் ரமேஷ் திங்கள்கிழமை கூறியதாவது: சூரசம்ஹாரத்தின்போது, பாடகா் வேல்முருகன் முதல்வரின் பெயரையும், எனது பெயரையும் கூறியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

ஏன் அவா் எங்களது பெயரைக் கூறினாா் என்றும் தெரியவில்லை. பாடகா் வேல்முருகனிடம்தான் இதுகுறித்து விளக்கம் கேட்க வேண்டும் என்றாா் அவா்.