FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வானிலை: இன்று காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

20 வினாடிகள் முன்பு
மழை
பகிர்:

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை (நவ.16) ‘அக்வான்’ புயல் உருவாகிறது. இது, அடுத்த 2 நாள்களில் ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தில் நவ.17, 18, 19-ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இதன் தொடர்ச்சியாக, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 16) காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.