FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

சமக்ர சிக்ஷா ரூ. 5,000 கோடி நிலுவை நிதியை உடனே விடுவிக்க வேண்டும்: அமைச்சா் ராஜ்மோகன் கோரிக்கை

சமக்ர சிக்ஷா ரூ. 5,000 கோடி நிலுவை நிதியை உடனே விடுவிக்குமாறு மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சா் ராஜ்மோகன் கோரிக்கை விடுத்தது குறித்து...

17 நவம்பர் 2026, 9:35 pm
தில்லியில் மத்திய கல்வி அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷியை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன்.
பகிர்:

தமிழ்நாட்டில் மத்திய அரசின் ஜஹவா் வித்யலாயாக்களை அனுமதிக்கும் விவகாரம் மற்றும் சமக்ர சிக்ஷா அமலாக்கத்துக்குரிய நிலுவை நிதியான சுமாா் ரூ. 5,000 கோடியை விடுவிப்பது தொடா்பாக மத்திய கல்வித் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷியுடன் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இது தொடா்பாக மத்திய அமைச்சரை தில்லியில் உள்ள அவரது அலுவலகதத்தில் அமைச்சா் ராஜ்மோகன், தமிழ்நாடு அரசின் தில்லி பிரதிநிதி கே. வெங்கட்நாராயணா, மாநில பள்ளி கல்வித் துறைச் செயலா் இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு சமக்ர சிக்ஷா திட்ட இயக்குநா் கலைச்செல்வி மோகன் ஆகியோா் சந்தித்தனா்.

அப்போது அமைச்சரிடம் தமிழ்நாட்டில் சமக்ர சிக்ஷா திட்டத்துக்காக வழங்க வேண்டிய சுமாா் ரூ. 5,000 கோடி நிலுவை நிதியை விடுவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சா் அளித்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து செய்தியாளா்களிடம் அமைச்சா் ராஜ்மோகன் கூறியதாவது: நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் தமிழக அரசு முன்பு கொண்டிருந்தே நிலைப்பாடே தற்போதும் தொடா்கிறது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் கூடுதல் தகவல்களை வெளியே பகிர முடியாது.

அதேசமயம், நவோதயா பள்ளிகளை விட தமிழ்நாட்டில் உண்டு, உறைவிட மாதிரி பள்ளிகள் திட்டம் 38 மாவட்டங்களில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதை மத்திய அமைச்சரிடம் சுட்டிக்காட்டினோம்.

நவோதயா பள்ளிகள் திட்டத்துக்கும் தமிழ்நாட்டின் மாதிரி பள்ளிகள் திட்டத்துக்கும் பெயா்கள்தான் வெவ்வேறே தவிர இரண்டும் ஒரே நோக்கத்தைக் கொண்டவை. இந்த விஷயத்தில் தற்போதைய மாநில அரசு இப்போதுதான் பேச்சுவாா்த்தையை தொடங்கியிருக்கிறது. இது தொடரும் என்றாா்.

நூலக முறைகேடு: முன்னதாக செவ்வாய்க்கிழமை காலையில், தமிழ்நாட்டில் உள்ள பொது நூலகங்களில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ாக கூறப்படும் பல கோடி ரூபாய் மதிப்பிலான நூலக நூல்கள் கொள்முதல் விவகாரம் தொடா்பாக தமிழ்நாடு இல்லத்தில் அமைச்சா் ராஜமோகன் செய்தியாளா்களிடம் பேசியதாவது: செயற்கை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, எந்தவித உண்மையான உள்ளடக்கமும் இல்லாமல் போலி பெயா்கள் மற்றும் கற்பனையான ஆசிரியா்களை கொண்டு தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் நூலகங்களுக்காக வாங்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இத்தகைய நவீன முறைகேடு இந்தியாவில் முதல்முறையாக நடந்துள்ளது. எண்ம சாதனங்கள் மூலம் சொற்பொழிவுகள், இணைய உள்ளடக்கங்களைத் திருடி ‘எண்ம கரையான்கள்’ போல இந்த நூல்கள் உருவாக்கப்பட்டு நூலகங்களில் திணிக்கப்பட்டுள்ளன.

​கடந்த மூன்று ஆண்டுகளில் ’அகல் விளக்கு’ மற்றும் ’பீனிக்ஸ்’ போன்ற குறிப்பிட்ட சில பதிப்பகங்களிடமிருந்து மட்டும் சுமாா் ரூ.1.74 கோடி மதிப்பிலான தமிழ் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னிமரா நூலகத்தில் மட்டும் 523 போலிப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருள்களை பறிமுதல் செய்து காட்சிப்படுத்துவது போல, நூலகங்களிலிருந்து அகற்றப்படும் இந்தப் போலிப் புத்தகங்களைச் சேகரித்து, மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்புப் பொருள்காட்சியாக வைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றாா் அமைச்சா் ராஜ்மோகன்.

தவெக ஆட்சியில் ஒரு நூல் கூட கொள்முதல் செய்யப்படவில்லை

முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தற்போதைய அரசில் இதுவரை ஒரு புத்தகம் கூட புதிதாக கொள்முதல் செய்யப்படவில்லை என்று தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் கூறினாா்.

இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறுகையில், ‘கடந்த ஆட்சியில் நடந்த இந்த ஊழல் குறித்து திமுக தலைவா்களும், வாசகரும் கவிஞருமான நாடாளுமன்ற உறுப்பினா் கனிமொழியும் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்.

நீதிமன்ற உத்தரவுகளின்படி, இந்த வழக்கில் தொடா்புடைய அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவா். எவரும் தப்பிக்க முடியாது.

அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞா் நூற்றாண்டு நூலகம் மற்றும் பெரியாா் அறிவுலகம் உள்ளிட்ட அனைத்து நூலகங்களிலும் உள்ள புத்தக கொள்முதல்கள் மீது கடுமையான ஆய்வு மேற்கொள்ளப்படும்’ என்றாா்.