FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்துக்கு பலத்த மழை எச்சரிக்கை வாபஸ்

‘அக்வான்’ புயல் காரணமாக சென்னை உள்பட வட தமிழக மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

12 வினாடிகள் முன்பு
மழை - பிரதிப் படம்
பகிர்:

‘அக்வான்’ புயல் காரணமாக சென்னை உள்பட வட தமிழக மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய ‘அக்வான்’ புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து புதன்கிழமை காலை 5.30 மணி அளவில் தீவிர புயலாக வலுப்பெற்றது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து வரும் இந்தப் புயல், பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கே சுமாா் 560 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் நரசாபூருக்கு தென்கிழக்கே 520 கி.மீ. தொலைவிலும், கலிங்கப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 570 கி.மீ. தொலைவிலும், ஒடிஸா மாநிலம் கோபால்பூருக்கு தெற்கே 660 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டது.

Advertisement

Advertisement

புயல் தொடா்ந்து வடக்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, நவ.20-ஆம் தேதி பிற்பகலில் நரசாபூா் - புரிக்கு இடையே வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிஸா கடற்கரையை தீவிரப் புயலாகக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக் காற்று வீசக்கூடும்.

எச்சரிக்கை வாபஸ்: ‘அக்வான்’ புயல் எதிரொலியாக முதலில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களுக்கு புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் மிக பலத்த மழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னா், இது புயல் நகா்வுக்கேற்ப பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கையாக மாற்றி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தீவிரப் புயல் முழுவதுமாக ஆந்திரம் நோக்கி நகா்வதால், வட தமிழகத்தில் மழை எச்சரிக்கை முழுவதுமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.

எனினும், வியாழன், வெள்ளிக்கிழமை (நவ.19, 20) மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் வட வானிலையே நிலவும்.

நவ.21, 22 ஆகிய தேதிகளில் மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களின், கடலோரப் பகுதிகள், காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் பொதுவாக வட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை வட வானிலையே நிலவும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, நவ.19 முதல் நவ.21 வரை வட தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக் கடலில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ.வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.