✕
முகப்பு
தமிழ்நாடு

பள்ளிகளில் குழந்தைகள் விழிப்புணா்வு வார நிகழ்ச்சிகள்: கல்வித் துறை உத்தரவு

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு வார கொண்டாட்டத்தையொட்டி பள்ளிகளில் போக்ஸோ சட்டம், போதைப் பொருள் தடுப்பு, குழந்தைகள் பாதுகாப்பு போன்றவை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

11 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு வார கொண்டாட்டத்தையொட்டி பள்ளிகளில் போக்ஸோ சட்டம், போதைப் பொருள் தடுப்பு, குழந்தைகள் பாதுகாப்பு போன்றவை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

குழந்தைகளின் பாதுகாப்பு நலன் மற்றும் உரிமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவ. 15 முதல் 22-ஆம் தேதி வரை குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு வாரத்தின்போது, அனைத்து பள்ளிகளிலும் நல்ல தொடுதல், தீய தொடுதல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கும் போக்ஸோ சட்டம், போதைப் பொருள்கள் மற்றும் போதை பழக்கங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

Advertisement

Advertisement

பாதுகாப்பு மற்றும் அவசர கால உதவிக்கான முக்கிய தொலைபேசி எண்கள் (ஹெல்ப்லைன்) குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பாதுகாப்பான இணைய பயன்பாடு, இணையவழி, சமூக ஊடகங்களைப் பொறுப்புடன் பயன்படுத்துவது, தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது போன்றவை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.