மருத்துவமனையில் ஆளுநர் ஆர்லேகரை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் விஜய்!
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆளுநர் அர்லேகரை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் விஜய்யைப் பற்றி...
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரைச் சந்தித்து முதல்வர் விஜய் நலம் விசாரித்தார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலின்போது பொறுப்பு ஆளுநராகச் செயல்பட்ட அர்லேகர், கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (நவ. 18) மாலை அனுமதிக்கப்பட்டார்.
Advertisement
Advertisement
அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என்றும், ஆளுநரின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.
ஆளுநர் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா? அல்லது உடல்நலப் பாதிப்புகளால் அனுமதிக்கப்பட்டுள்ளாரா? என்பது குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகாத நிலையில், முதல்வர் விஜய் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஆளுநரிடம் நலம் விசாரித்த முதல்வர் விஜய், அதைத்தொடர்ந்து காலமான கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்குச் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Chief Minister Vijay visited Tamil Nadu Governor R. V. Arlekar, who has been admitted to a private hospital in Chennai, and inquired about his well-being.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.