FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டதை எதிர்த்து வழக்கு!

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு...

54 வினாடிகள் முன்பு
சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்
பகிர்:

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த மென் பொறியாளரும், பதிப்பாளருமான கௌதமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஆண்டுக்கு மூன்று கோடி பயணிகள் வந்துபோகும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிலவும் இடநெருக்கடியை சமாளிக்க 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

பரந்தூர் விமான நிலையம் அமைக்க 1700 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த 680 கோடி ரூபாய் அரசு பணம் செலவழிக்கப்பட்டு, 48 சதவிகித நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, இந்தத் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது என மனுவில் கூறியுள்ளார்.

விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தை கைவிடுவதாக கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

புதிய விமான நிலையம் அமைக்க பன்னூர், திருப்போரூர், படாலம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து இறுதியில் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், 2,325 ஹெக்டேர் பரப்பில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க, 1527 ஹெக்டர் தனியார் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு 2023 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 798 ஹெக்டேர் அரசு நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டதாகவும், எந்தவித தொழில்நுட்ப புள்ளி விவரங்களும் இல்லாமல், நிபுணர் குழுவின் அறிக்கைகள் இல்லாமல், பொருளாதார ஆய்வுகள் ஏதும் நடத்தாமல் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் 110 வது விதியின் கீழ் வெளியிடப்பட்ட பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டது தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்பை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்ட முடிவை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என்றும் கைவிடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Lawsuit filed against the abandonment of the Parandur airport project!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.