தை பிறந்தால் பல்கலைக்கழகங்களுக்கு வழி பிறக்கும்: அமைச்சர் விஸ்வநாதன்
தை பிறந்தால் பல்கலைக்கழகங்களுக்கு வழி பிறக்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் பேசியது குறித்து...
தை பிறந்தால் பல்கலைக்கழகங்களுக்கு வழி பிறக்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் வியாழக்கிழமை (நவ. 19) தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுப் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பணி காலியாக உள்ளது. சில பல்கலைக்கழகங்களில் தற்காலிகத் துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டு நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக சில பல்கலைக் கழகங்களில், தற்காலிகத் துணை வேந்தர்களும் இல்லாமல் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் குறித்து அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது:
நான் அமைச்சராகி ஆறு மாத காலமாக என்னிடம் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் கேட்கும் ஒரே கேள்வி, துணை வேந்தர் நியமனம் எப்போது? என்பதுதான். கடந்த 6 ஆண்டுகளாக துணை வேந்தர் நியமனத்தில் நிறைய பிரச்னைகள் இருந்தன.
அதில் பலவற்றில் தற்போது முன்னேற்றங்கள் நடைபெற்றுள்ளன. அந்த முன்னேற்றங்களை விரைவில் நான் தெரிவிப்பேன். அதற்கான நல்ல நேரம் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. விரைவில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், தமிழக மக்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் நல்ல செய்தியைக் கொடுப்பேன். தை பிறந்தால் கண்டிப்பாக பல்கலைக்கழகங்களுக்கு வழிபிறக்கும் என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.