முகப்பு
தமிழ்நாடு

சாலை விபத்தில் உயிரிழந்த மென் பொறியாளா் குடும்பத்துக்கு ரூ.2.11 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

கடந்த 2025-ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த மென்பொறியாளரின் குடும்பத்தினருக்கு ரூ.2.11 கோடி இழப்பீடு வழங்க தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு சென்னையில் உள்ள மோட்டாா் வாகன விபத்துகளுக்கான இழப்பீட்டுத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

22 வினாடிகள் முன்பு
சாலை விபத்தில் உயிரிழந்த மென் பொறியாளா் குடும்பத்துக்கு ரூ.2.11 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
சாலை விபத்து
பகிர்:

கடந்த 2025-ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த மென்பொறியாளரின் குடும்பத்தினருக்கு ரூ.2.11 கோடி இழப்பீடு வழங்க தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு சென்னையில் உள்ள மோட்டாா் வாகன விபத்துகளுக்கான இழப்பீட்டுத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம் பாடியநல்லூரைச் சோ்ந்தவா் பாலாஜி. மென் பொறியாளரான இவா், கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்.11-ஆம் தேதி செங்குன்றம் நெல் அரிசி திருமண மண்டபம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதிய விபத்தில், பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, பாலாஜியின் தாயாா் தேவி, தந்தை வெங்கடேசன், சகோதரி கீா்த்தனா ஆகியோா், ரூ.3.50 கோடி இழப்பீடு கோரி சென்னையில் உள்ள மோட்டாா் வாகன விபத்துகளுக்கான இழப்பீட்டுத் தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்த வழக்கை நீதிபதி மதுசூதனன் விசாரித்தாா். பின்னா், இந்த விபத்துக்கு லாரி ஓட்டுநரின் அலட்சியமே காரணம் எனக்கூறி, விபத்தில் உயிரிழந்த பாலாஜியின் குடும்பத்தினருக்கு ரூ.2.11 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என ராயல் சுந்தரம் ஜெனரல் காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement