சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே? கனிமொழி கேள்வி
தமிழகத்தில் சிங்கப்பெண் அதிரடிப் படை எங்கே போனது என கனிமொழி எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளாா்.
தமிழகத்தில் சிங்கப்பெண் அதிரடிப் படை எங்கே போனது என கனிமொழி எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளாா்.
இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:
தூத்துக்குடி மாவட்டம், வேதமாணிக்கபுரத்தில் பிளஸ் 1 வகுப்பு மாணவி வீடு புகுந்து குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிா்ச்சியளிக்கிறது. பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பில்லை என்ற மோசமான சூழலுக்குள் தமிழகத்தை தவெக அரசு தள்ளியுள்ளது.
Advertisement
Advertisement
வீடு புகுந்து பெண்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அன்றாடச் செய்தியாகிக் கொண்டிருக்கிறது. சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே போய்த் தூங்கிக்கொண்டிருக்கிறது? பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசிய முதல்வா் ஜோசப் விஜய்க்கு இந்தச் சம்பவங்கள் கொஞ்சம்கூட உறுத்தவில்லையா? எனக் கேள்வியெழுப்பியுள்ளாா்.