திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்?
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது குறித்து...
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை திருநாளில் தீபமேற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிய பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், நவம்பர் 24 ஆம் தேதி 'தீபத்தூண்' (கல் தூண்) மீது கார்த்திகை தீபத்தை ஒருமுறை மட்டும் ஏற்றுவதற்கு சில கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
இந்த தற்காலிக ஏற்பாடு என்பது, நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு வழக்கத்தையோ அவசியமான மத நடைமுறையை அங்கீகரிப்பதாகவோ, அல்லது அந்த இடத்தின் உரிமை மற்றும் அணுகல் தொடர்பான இறுதித் தீர்ப்புகளைப் பாதிப்பதாகவோ கருதப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
பாஜக மற்றும் இந்து அமைப்புகள் இந்தத் தீர்ப்பை 'தர்மத்தின் வெற்றி' என்றும், பக்தர்களின் அரசியலமைப்பு உரிமைகளுக்கான வெற்றி என்றும் வரவேற்றுள்ளன.
இருப்பினும், திமுக, இடதுசாரிக் கட்சிகள், எம்.எம்.கே மற்றும் எஸ்டிபிஐ ஆகிய அமைப்புகள் இந்த உத்தரவு குறித்துக் கடும் கவலை தெரிவித்துள்ளன. அந்த இடத்தின் உரிமை மற்றும் வரலாற்றுச் சூழல் குறித்த கேள்விகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், இத்தகைய உத்தரவு ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும் என்று அவை எச்சரித்துள்ளன.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சனிக்கிழமை (நவ. 21) இரவில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு, இன்னும் விசாரணைக்காக பட்டியலிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.