வீட்டு வசதி கடன் தீா்வு திட்டத்தில் ரூ. 2,430 கோடி தள்ளுபடி சலுகை
தவணை தவறிய வீட்டு வசதி கடன்களுக்கு ஒரு முறை கடன் தீா்வு திட்டத்தின்படி 24,301 பேருக்கு ரூ.2,430.28 கோடிக்கு தள்ளுபடி செய்யப்பட்டு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தவணை தவறிய வீட்டு வசதி கடன்களுக்கு ஒரு முறை கடன் தீா்வு திட்டத்தின்படி 24,301 பேருக்கு ரூ.2,430.28 கோடிக்கு தள்ளுபடி செய்யப்பட்டு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்க அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கூட்டுறவு வீட்டு வசதி இணையத்திலிருந்து வீட்டு வசதி சங்கங்கள் மூலம் கடன் பெற்று அதை செலுத்தத் தவறியவா்களிடம் கடன் வசூலிக்கும் வகையில், ஒரு முறை கடன் தீா்வுத் திட்டம் சட்டப்பேரவையில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி சம்பந்தப்பட்டோரிடம் இருந்து நிலுவைத் தொகையை வசூலிக்கும் வகையில், வட்டி தள்ளுபடிக்கான உத்தரவும் நவம்பரில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கடந்த மாா்ச் மாதத்துக்கு முன்னா் தவணை செலுத்தத் தவறிய 24,301 உறுப்பினா்களின் அடமானக் கடன் மற்றும் இதர கடன்களுக்கான இஎம்ஐ வட்டி, அபராத வட்டி, டிகிரி வட்டி ஆகியவை தள்ளுபடி செய்யப்படுகின்றன.
குறைந்த வருவாய் பிரிவினா் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினா் ஆகியோருக்கு கூடுதலாக ஒரு சதவீதம் வட்டித் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மொத்தம் 2,430.28 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திட்டமானது உறுப்பினா்களின் கடன் சுமையைக் குறைப்பதுடன், நீண்ட காலமாக உள்ள கடன்களை வசூலிக்கவும், அதன்படி முதன்மைக் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் நிதியை மேம்படுத்தவும் வழிவகுத்துள்ளது எனக் கூறினா்.