முகப்பு

அரசுக்கு ரூ. 10.84 கோடி இழப்பு: ஊழல் தடுப்புத் துறையினர் சோதனை!

அரிசி ஆலையில் சோதனையில் ஈடுபட்டு வரும் ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள்.

22 வினாடிகள் முன்பு
அரசுக்கு ரூ. 10.84 கோடி இழப்பு: ஊழல் தடுப்புத் துறையினர் சோதனை!
காஞ்சிபுரம் அருகேயுள்ள திம்மசமுத்திரத்தில் உள்ள அரிசி ஆலையில் சோதனையில் ஈடுபட்டு வரும் ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள். - படம்: தினமணி
பகிர்:

காஞ்சிபுரம்: விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகள், அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரிசியாக மாற்றியதில் அரசுக்கு ரூ.10.84 கோடிக்கு இழப்பீடு ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் தொடர்புடைய இரு அதிகாரிகள் மற்றும் 9 அரிசி ஆலைகள் உள்பட மொத்தம் 11 இடங்களில் ஊழல் தடுப்புத் துறையினர் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல் மூட்டைகள் நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரிசியாக மாற்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பெறுவது வழக்கம்.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் அரிசி ஆலைகளுக்கு பிரித்து அனுப்பி அரிசியாக பெறும் இந்த நடைமுறையில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.

Advertisement

Advertisement

புகாரின் பேரில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக காஞ்சிபுரம் மண்டல மேலாளர் அருள் வனிதா மற்றும் தரக் கட்டுப்பாட்டு உதவி மேலாளர் ஜெயவேல் ஆகியோர் 4 தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களோடு இணைந்து கூட்டு சதி செய்து 1792.633 மெட்ரிக் டன் நெல் பற்றாக்குறையை ஏற்படுத்தியிருப்பதும் தெரிய வந்தது.

இதன் மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு ரூ.10,84,47,484 பண இழப்பு உண்டாக்கியதாக ஊழல் தடுப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. வழக்குப் பதிவின் அடிப்படையில் மண்டல மேலாளர் அருள் வனிதா மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயவேல் உள்ளிட்ட இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், ஊழல் தடுப்புத் துறையினர் காஞ்சிபுரத்தில் திம்மசமுத்திரம், சிறுகாவேரிப்பாக்கம், முசரவாக்கம் உள்பட 9 இடங்களில் உள்ள அரிசி ஆலைகளிலும், செங்கல்பட்டில் உள்ள மண்டல மேலாளர் அருள் வனிதா மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தரக்கட்டுபாட்டு அலுவலர் ஜெயவேல் வீடுகள் உள்பட மொத்தம் 9 இடங்களில் ஊழல் தடுப்புத் துறையினர் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.

summary

On Wednesday, officials from the Directorate of Vigilance and Anti-Corruption conducted raids at 11 locations—including the premises of two officials and nine rice mills—in connection with a case involving a loss of Rs 10.84 crore to the government. The loss occurred during the processing of paddy, procured from farmers, into rice at these mills.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.