முகப்பு

ஆவடி அருகே வீடுகளைச் சூழ்ந்த மழைநீர்! வடிகால் வசதி செய்து தரக் கோரிக்கை!

மழைநீர் சூழ்ந்த குடியிருப்புகள் பற்றி..

22 வினாடிகள் முன்பு
ஆவடி அருகே வீடுகளைச் சூழ்ந்த மழைநீர்! வடிகால் வசதி செய்து தரக் கோரிக்கை!
மழைநீர் சூழ்ந்த குடியிருப்புகள்
பகிர்:

ஆவடி அருகே திருமுல்லைவாயலில் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இப்பகுதியில் வடிகால் வசதி செய்து தர வேண்டும் எனக் குடியிருப்போர் கோரிக்கை விடுத்ததுள்ளனர்.

ஆவடி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாகத் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருந்தது. இதையடுத்து, ஆவடி அருகே திருமுல்லைவாயல் விவேகானந்தா நகர் உள்ள சம்பங்கி தெரு, குறிஞ்சி தெரு, சூரியகாந்தி தெரு, சாமந்தி தெரு, தாமரை தெரு உள்ளிட்ட தெருக்களில் மழைநீர் தேங்கி நின்றது.

குறிப்பாக குறிஞ்சி தெருவில் வீட்டின் முன்பு வெள்ளம் தேங்கி நின்றதால் அப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குடியிருப்புகளைச் சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளதால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

Advertisement

Advertisement

மேலும், மழைநீரில் பாம்புகள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் படையெடுத்து வந்தன. ஒவ்வொரு மழைக் காலத்தில் இப்பகுதியில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் விவேகானந்தா நகர் பகுதியை ஆய்வு செய்து வெள்ளப் பாதிப்பைத் தடுக்க மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் எனக் குடியிருப்போர் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.