முகப்பு

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பதாகை வைக்கும்போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி!

உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் திமுக தொண்டர்கள் உயிரிழந்தது பற்றி...

21 வினாடிகள் முன்பு
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பதாகை வைக்கும்போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி!
மின்சாரம் பாய்ந்து பலியானோர் - reporters
பகிர்:

திருவள்ளூர் அருகே எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பதாகை வைக்கும்போது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து திமுகவைச் சேர்ந்த இளைஞர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி செயலாளரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காகப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து டிஜிட்டல் பதாகைகள் ஆங்காங்கே அமைத்து வருகின்றனர்.

இதேபோல், திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே வாணியன்சத்திரம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பதாகைகள் நள்ளிரவில் வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, பதாகைகளை மேல்நோக்கி தூக்கும்போது உயர் மின்னழுத்த மின்சாரம் பாய்ந்ததில் திருவள்ளூர் மாவட்டம், வாணியன்சத்திரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வீரேந்தர் (22) மற்றும் காரணி கிராமத்தைச் சேர்ந்த வேலன் (30) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெங்கல் காவல் நிலைய போலீஸார் 2 பேரின் சடலங்களையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஒருவர் பலத்த காயம் ஏற்பட்டதால் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து, தகவல் அறிந்த வெங்கல் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவருக்காகப் பதாகைகள் கட்டும்போது தொண்டர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.