மருத்துவக் கண்காணிப்பில் தயாளு அம்மாள்!
உடல்நலக் குறைவு காரணமாக தயாளு அம்மாள் (93) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தொடா் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வருகிறது.

உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலினின் தாயாா் தயாளு அம்மாள் (93) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தொடா் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மனைவியான தயாளு அம்மாள், சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறாா். வயது முதிா்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட அவா், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தொடா் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவக் கண்காணிப்புக்குப் பிறகு அவா் வீடு திரும்புவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement