ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிப்பு! வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு - காங்கிரஸ்
இலங்கைக் கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது குறித்து...
இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் ஞாயிற்றுக்கிழமை (அக். 4) கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
ராமேஸ்வரம் தங்கச்சிமடத்திலிருந்து கடலுக்குச் சென்ற மத்தியாஸ் (22), மோபிஸ் (21), அபிஸ்டன் (27), ஆண்டனி புரூட்ஸ் (42), எபிஸ்டன் (29), ஸ்டீவன்சன் (22), ஜான் ஜேசன் (24), ஆண்டனி பிரதீப் (26), சுபார்தன் (24) ஆகிய நமது 9 மீனவர்களை இலங்கை கடற்படை நெடுந்தீவு அருகே மீண்டும் சிறைப்பிடித்து விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
Advertisement
Advertisement
தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பைப் பற்றி வாய் திறக்காமல் மத்திய பாஜக அரசும் பிரதமர் மோடியும் வேடிக்கை பார்ப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
சர்வதேச கடல் எல்லை விவகாரத்தைக் காரணம் காட்டி இலங்கைக் கடற்படை நடத்தும் இந்தத் தொடர் அராஜகத்தைத் தடுத்து நிறுத்த மோடி அரசு துளியும் துணிவின்றி மௌனம் காப்பது ஏன்? சிறைபிடிக்கப்பட்டுள்ள 9 ராமேஸ்வர மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகையும் உடனடியாக மீட்க மத்திய அரசு தூதரக ரீதியாக போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரு நாட்டுப் பேச்சுவார்த்தைகள் மூலம் நமது மீனவர் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண மோடி அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது; இனியும் வெறும் விளம்பர வேலைகளில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு, நமது மீனவர்களின் பாதுகாப்புக்கு ஒரு நிரந்தரத் தீர்வை உடனே காண வேண்டும்! என்று குறிப்பிட்டுள்ளார்.
Tamil Nadu Congress Committee President Manickam Tagore condemned the detention of nine Rameswaram fishermen by the Sri Lankan Navy on Sunday (Oct. 4).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.